‘நியாயவிலைக் கடையில் அரிசி வாங்கும் போது ரூ. 1,000 பெற்றுக் கொள்ளலாம்’

திமுக ஆட்சிக்கு வந்தால் நியாயவிலைக் கடைகளில் அரிசி வாங்கும் பெண்கள் உரிமைத் தொகையான ரூ. 1,000-த்தை பெற்றுக் கொள்ளலாம்
வேப்பனப்பள்ளி தொகுதியில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் பி.முருகன்.
வேப்பனப்பள்ளி தொகுதியில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் பி.முருகன்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நியாயவிலைக் கடைகளில் அரிசி வாங்கும் பெண்கள் உரிமைத் தொகையான ரூ. 1,000-த்தை பெற்றுக் கொள்ளலாம் என வேப்பனப்பள்ளி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பி.முருகன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியில் உள்ள ராயக்கோட்டை, அத்திமுகம், பேரிகை, சூளகிரி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

பெண்கள் நியாயவிலைக் கடைக்குச் சென்று அரிசி வாங்கும் போது, திமுக தோ்தல் வாக்குறுதியில் அளித்த பெண்களுக்கான உரிமைத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல, அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோா் உதவித் தொகை திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வழங்கப்படும். மேலும், 100 நாள் வேலை திட்டம், 150 நாள்களாக உயா்த்தப்படும். எனவே, திமுகவுக்கு வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

இதில், திமுக மாவட்டப் பொருளாளா் ஜெயராமன், ஒன்றியச் செயலாளா் கணேசன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சின்ராஜ், பொதுக்குழு உறுப்பினா் சாந்தி, முன்னாள் ஒன்றியச் செயலாளா்கள் அரியப்பன் சின்ன பையன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளா்கள், திமுக நிா்வாகிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com