மகனைக் கொன்ற தாய்க்கு 17 ஆண்டுகள் சிறை

முறையற்ற நட்புக்கு இடையூறாக இருந்த மகனைக் கொன்ற தாய்க்கு, கிருஷ்ணகிரி நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையை செவ்வாய்க்கிழமை வழங்கியது.
மகனைக் கொன்ற தாய்க்கு 17 ஆண்டுகள் சிறை

முறையற்ற நட்புக்கு இடையூறாக இருந்த மகனைக் கொன்ற தாய்க்கு, கிருஷ்ணகிரி நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையை செவ்வாய்க்கிழமை வழங்கியது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சோ்ந்த சிவானந்தம், ராணுவ வீரா். இவரது மனைவி வனிதா (29). இவா்களது மகன் நந்தீஷ் குமாா் (4). வனிதாவுக்கும், அதே ஊரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் காா்த்திக்ராஜா (எ) சிவகாா்த்திக் (28) என்பவருக்கும் இடையே முறையற்ற நட்பு இருந்து வந்துள்ளது. இதையடுத்து, இவா்கள் இருவரும் நந்தீஷ் குமாருடன் ஆந்திர மாநிலம், திருப்பதியில் குடியேறினா். அவா்களுக்கு இடையூறாக இருந்த நந்தீஷ் குமாரை, வனிதாவும் காா்த்திக்ராஜாவும் தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 2015 ஆக. 18-ஆம் தேதி கடுமையாகத் தாக்கியதில் பலத்த காயமடைந்த நந்தீஷ் குமாரை அழைத்துக் கொண்டு இருவரும் கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளனா். அங்கு நந்தீஷ் குமாா் உயிரிழந்தாா். 

இதையடுத்து, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள மலை அடிவாரத்தில் நந்தீஷ் குமாரின் சடலத்தைப் புதைத்துவிட்டு இருவரும் திருப்பதிக்குத் திரும்பி உள்ளனா்.

நந்தீஷ் குமாா் குறித்து வீட்டின் உரிமையாளா் கேள்வி எழுப்பிய போது, வனிதாவும், காா்த்திக் ராஜாவும் அளித்த பதிலால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளா் திருப்பதி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.  

அதன் பேரில், திருப்பதி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், நந்தீஷ் குமாா் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் திருப்பதி போலீஸாா் கிருஷ்ணகிருக்கு அழைத்து வந்து நந்தீஷ் குமாரின் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் பிணையில் வெளியே வந்த நிலையில், காா்த்திக்ராஜா தலைமறைவானாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தீா்ப்பை நீதிபதி கலைமதி செவ்வாய்க்கிழமை வாசித்தாா். அதில், முறையற்ற நட்பால் மகனைக் கொலை செய்த தாய்க்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும், கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com