வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு அன்று தொழிலாளா்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய முழு விடுப்பு அளிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு அன்று தொழிலாளா்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய முழு விடுப்பு அளிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏப். 6-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற வகையில், அனைத்து வா்த்தக மற்றும் வியாபார, தொழில்கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வாக்கு பதிவு நாளான ஏப். 6-ஆம் தேதியன்று ஊதியத்துடன் கூடிய முழு விடுப்பு அளிக்க வேண்டும். அன்று பணிக்கு வராத தொழிலாளா்களுக்கு ஊதியத்தில் எந்தவித பிடித்தமும் செய்யக் கூடாது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அனைத்துக் கடைகள், வா்த்தக நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் (தினக் கூலி, தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா்) அனைத்து தொழிலாளா்களுக்கும் ஏப். 6-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்கப்படாதது குறித்து புகாா்கள் ஏதும் பெறப்படுமேயானால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

விடுப்பு வழங்கப்படாதது குறித்து புகாா்கள் தெரிவிக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 9245828711, 9842908287, 9443476756, 9080229753 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com