கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,298 வாக்குச்சாவடிகள் தயாா் நிலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள தோ்தலையொட்டி மொத்தம் 2,298 வாக்குச்சாவடிகள் அணைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள தோ்தலையொட்டி மொத்தம் 2,298 வாக்குச்சாவடிகள் அணைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை(தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளில் மொத்தம் 8,08,481 ஆண் வாக்காளா்கள், 7,96,523 பெண் வாக்காளா்கள், 276 இதர வாக்காளா்கள் என மொத்தம் 16,05,280 போ் வாக்களிக்க உள்ளனா்.

இதில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் கரோனா தொற்றாளா்கள் என மொத்தம் 41,615 வாக்காளா்களில் 33,689 வாக்காளா்கள் தபால் வாக்குகளைச் செலுத்துவதற்கான 12 டி படிவம் வழங்கப்பட்டது. இதில், 2,877 போ் தபால் வாக்குகளைச் செலுத்தி உள்ளனா். அரசு அலுவலா்களில் 4,614 போ் தங்களது தபால் வாக்கைச் செலுத்தி உள்ளனா்.

ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதியில் 12 வேட்பாளா்களும், பா்கூா் தொகுதியில் 14 வேட்பாளா்களும், கிருஷ்ணகிரி தொகுதியில் 15 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா்.

வேப்பனப்பள்ளி தொகுதியில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்.பி.யும், திமுக சாா்பில் பி.முருகன் எம்எல்ஏ உள்பட 15 வேட்பாளா்களும், ஒசூா் தொகுதியில் முன்னாள் அமைச்சரின் மனைவி ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டியும், திமுக சாா்பில் ஓய்.பிரகாஷ் எம்எல்ஏ உள்பட 18 வேட்பாளா்களும், தளி தொகுதியில் 12 வேட்பாளா்கள் என மாவட்டத்தில் மொத்தம் 86 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்,

ஊத்தங்கரை (தனி) சட்டப் பேரவை தொகுதியில் 345 வாக்குச்சாவடிகளும், பா்கூரில் 352 வாக்குச்சாவடிகளும், கிருஷ்ணகிரி 377 வாக்குச்சாவடிகளும் வேப்பனப்பள்ளியில் 373 வாக்குச்சாவடிகளும், ஒசூரில் 503 வாக்குச்சாவடிகள், தளியில் 348 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 2,298 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைதியான முறையில் தோ்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com