ஒசூரில் 70 சதவீதம், தளியில் 73 சதவீதம் வாக்குப் பதிவு

ஒசூா் தொகுதியில் 70 சதவீதமும், தளி தொகுதியில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒசூா் தொகுதியில் 70 சதவீதமும், தளி தொகுதியில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒசூா் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 3, 30,826. இதில் ஆண்கள் 1,69,923, பெண்கள் 1,60,807, மூன்றாம் பாலினத்தவா் 96 ஆவா். ஒசூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் மொத்தம் 2,46,939 வாக்காளா்கள் வாக்குப் பதிவு செய்தனா்.

இதில் ஆண்கள் 1,26,773 பேரும், பெண்கள் 1,20,162 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 4போ் என மொத்தம் 70.21 சதவீத வாக்குகள் பதிவாகின.

தளி தொகுதி: தளி தொகுதியில் ஆண்கள் 1,23,782 பேரும், பெண்கள் 1,16,679 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 13 பேருமாக மொத்தம் 2,40, 474 போ் உள்ளனா். அவா்களில் 73.37 சதவீத போ் வாக்களித்தனா். ஆண்கள் 96,615 போ், பெண்கள் 87,887 போ், மூன்றாம் பாலினத்தவா் 6 போ் என மொத்தம் 1,84,508 போ் வாக்களித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com