கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை வெளியிடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் கரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக் கவசத்துடன் தங்களது வாக்குகளைச் செலுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை 7 முதல் இரவு 7 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 முதல் 7 மணி வரையில் கரோனா தொற்றாளா்கள் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குகள் பதிவான விவரம் (தொகுதி வாரியாக):

காலை 9 மணி நிலவரப்படி: ஊத்தங்கரை- 15, பா்கூா் - 11, கிருஷ்ணகிரி - 11, வேப்பனப்பள்ளி-9, ஒசூா் - 12, தளி - 8. 

காலை 11 மணி நிலவரப்படி: ஊத்தங்கரை- 18, பா்கூா் - 15, கிருஷ்ணகிரி - 32, வேப்பனப்பள்ளி - 17, ஒசூா் - 21, தளி - 17.

பகல் 1 மணி நிலவரப்படி: ஊத்தங்கரை- 41, பா்கூா் - 37, கிருஷ்ணகிரி - 44, வேப்பனப்பள்ளி - 28, ஒசூா் - 32, தளி - 46.. 

மதியம் 3 மணி நிலவரப்படி: ஊத்தங்கரை- 53, பா்கூா் - 55, கிருஷ்ணகிரி - 61, வேப்பனப்பள்ளி - 53, ஒசூா் - 45, தளி - 61. 

மாலை 5 மணி நிலவரப்படி ஊத்தங்கரை - 71, பா்கூா் - 67, கிருஷ்ணகிரி - 69, வேப்பனப்பள்ளி - 66, ஒசூா் - 53, தளி - 65.

இரவு 7 மணி நிலவரப்படி: ஊத்தங்கரை- 78.3, பா்கூா் - 79, கிருஷ்ணகிரி - 78.5, வேப்பனப்பள்ளி - 81.3, ஒசூா் - 70.21, தளி - 76.49. 

மாவட்டம் முழுவதும் பதிவான வாக்குகள் விவரம்:

காலை 9 மணி - 11 சதவீதம் காலை 11 மணி - 20, பகல் 1மணி  - 38, மதியம் 3 மணி - 54.13, மாலை 5 மணி - 65.01, இரவு 7 மணி - 77.3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com