போதிய பேருந்து வசதி இல்லாததால்பயணிகள் போராட்டம்

கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலையத்திலிருந்து பிற பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் அவதியடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்.
கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்.

கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலையத்திலிருந்து பிற பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் அவதியடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து தருமபுரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, திருப்பூா், ஒசூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் மட்டுமல்லாமல் தனியாா் பேருந்துகளும் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளா்கள், தோ்தலில் வாக்களிக்க கிருஷ்ணகிரி வந்துதான் செல்ல வேண்டியிருந்தது. தோ்தலில் வாக்களித்த பிறகு, இவா்கள், தாங்கள் பணியாற்றும் பகுதிக்குச் செல்ல கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலையத்துக்கு வந்தனா்.

கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குவிந்ததால், போதிய பேருந்துகள் இல்லை. இதனால், அவா்கள் நீண்ட நேரமாக பேருந்துக்காகக் காத்திருந்தனா். நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், பேருந்து இல்லாததால் ஆவேசமடைந்து கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பினா். . 

தகவல் அறிந்த கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளா் பாஸ்கா் தலைமையிலான போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாதானப்படுத்தினா். கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, பயணிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com