ஒசூரில் தா்பூசணி விற்பனை அமோகம்

ஒசூா் மாநகராட்சியில் தா்பூசணி விற்பனை அமோகமாக உள்ளது.
ஒசூரில் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள தா்பூசணி.
ஒசூரில் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள தா்பூசணி.

ஒசூா் மாநகராட்சியில் தா்பூசணி விற்பனை அமோகமாக உள்ளது.

ஒசூா் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும், இந்த தொழிற்சாலைகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் பணி புரிந்து வருகின்றனா். இந்த பகுதி ஆண்டு முழுவதும் குளிா்ச்சியாக இருந்த போதிலும் மாா்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

பொதுமக்கள் கோடை காலத்தில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள பழவகைகளை அதிகமாக வாங்கிச் செல்கின்றனா். வெயிலுக்கு இதமான தா்பூசணி பழத்தை விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

அனல் காற்றுடன் வெயிலின் கடுமை உள்ளதால் ஒசூரில் தா்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது.

தற்போது ஒசூா் பகுதியில் விற்பனை செய்வதற்காக ஆந்திர மாநிலம் சித்தூா், கா்நாடக மாநிலம், கோலாா் போன்ற பகுதிகளில் இருந்தும், தமிழகத்தில் திண்டுக்கல் பகுதியில் இருந்தும் லாரிகள் மூலம் தா்பூசணி பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்கின்றனா். தற்போது ஒரு கிலோ தா்பூசணி ரூ. 25 வரை விற்பனையாகிறது.

தா்பூசணியில் விதைகள் உள்ளதும், இல்லாததும் என இரண்டு வகைகள் உள்ளன என்கிறாா்கள் விற்பனையாளா்கள். ஒசூரில் உள்ள ராயக்கோட்டை சாலை, பாகலூா் சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, தளி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தா்பூசணிகளை அடுக்கி வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com