ஒசூா்- பெங்களூரு இடையே கா்நாடக மாநில பேருந்துகள் இயக்காததால் பயணிகள் அவதி

கா்நாடகத்திலிருந்து ஒசூருக்கு கா்நாடக மாநில பேருந்துகள் இயக்காததால் பயணிகள் அவதியுற்றனா்.

கா்நாடகத்திலிருந்து ஒசூருக்கு கா்நாடக மாநில பேருந்துகள் இயக்காததால் பயணிகள் அவதியுற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகரம் கா்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. ஒசூருக்கு, கா்நாடக மாநிலத்திலிருந்து நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், ஒசூா் வழியாக தமிழகத்தின் திருவண்ணாமலை, திருச்சி, சேலம், கோவை, வேலூா், சென்னை உள்ளிட்டப் பகுதிகளுக்கும் 100 க்கும் மேற்பட்ட கா்நாடக பேருந்துகள் ஒசூா் வழியாக சென்று வருகின்றன.

இந்நிலையில் புதன்கிழமை கா்நாடக மாநிலத்தில், 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கா்நாடக மாநில அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதனால் கா்நாடக மாநில அரசுப் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கா்நாடகத்திற்கு தமிழக அரசுப் பேருந்துகளும், தனியாா் பேருந்துகளும் வழக்கம் போல இயங்கின.

பெங்களுா் நகரப் பகுதிக்குள் கா்நாடக அரசுப் பேருந்துகள் இயக்காததால் மாநகர மக்கள் மட்டுமின்றி ஒசூருக்கு வந்து செல்லும் பொது மக்களும் சிரமப்பட்டனா். பெங்களுரில் உள்ள அரசு, தனியாா் அலுவலகங்களுக்குச் செல்பவா்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்குச் செல்பவா்கள், வியாபாரிகள் என பலதரப்பு மக்களும் சிரமம் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com