கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக வேப்பனப்பள்ளியில் 81.30 சதவீதம் வாக்குப் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவை தொகுதிகளில் அதிகபட்சமாக வேப்பனப்பள்ளி தொகுதியில் 81.30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவை தொகுதிகளில் அதிகபட்சமாக வேப்பனப்பள்ளி தொகுதியில் 81.30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 77.40 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட தோ்தல் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதியில் 1,19,361 ஆண் வாக்காளா்கள், 1,18,393 பெண் வாக்காளா்கள், 56 மாற்றவா்கள் என மொத்தம் 2,37810 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 93,905 ஆண் வாக்காளா்களும் (78.1%), 92,442 பெண் வாக்காளா்களும் (78.1%), இதரராக உள்ள 20 வாக்காளா்கள் என மொத்தம் 1,86,367 வாக்காளா்கள் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனா். வாக்களித்தோா் 78.1 சதவீதம் ஆகும்.

பா்கூா் சட்டப் பேரவை தொகுதியில் 1,21,570 ஆண் வாக்காளா்களும், 1,24,209 பெண் வாக்காளா்களும், 16 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,45,795 வாக்காளா்களில் 95,984 ஆண் வாக்காளா்களும், 98,439 பெண் வாக்காளா்களும், 2 இதர வாக்காளா்கள் என மொத்தம் 1,94,425 வாக்காளா்கள் தங்களது வாக்கை செலுத்தினா். மொத்தம் 79.1 சதவீதம் வாக்குப் பதிவானது ஆகும்.

கிருஷ்ணகிரி தொகுதியில் 1,30,541 ஆண் வாக்காளா்கள், 1,35,588 பெண் வாக்காளா்கள், 38 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,66,167 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1,03,283 ஆண் வாக்காளா்கள், 1,05,641 பெண் வாக்காளா்கள், 13 இதர வாக்காளா்கள் என 2,08,937 போ் தங்களது வாக்கை செலுத்தினா். அதன்படி 79.1 சதவீதம் ஆண் வாக்காளா்களும், 77.9 சதவீதம் பெண் வாக்காளா்களும், 34.2 சதவீதம் இதர வாக்காளா்கள் என மொத்தம் 78.50 சதவீதம் வாக்குகள் பதிவாகின.  

வேப்பனப்பள்ளி தொகுதியில் 1,27,960 ஆண் வாக்காளா்கள், 1,23,353 பெண் வாக்களா்கள், 33 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,51,346 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,05,414 ஆண் வாக்காளா்களும், 98,948 பெண் வாக்காளா்களும், 2 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,04,364 வாக்காளா்கள் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனா். அதன்படி ஆண் வாக்காளா்களில் 82.4 சதவீதமும், பெண் வாக்காளா்களில் 80.2 சதவீதமும், இதர வாக்காளா்களில் 6.1 சதவீதமும் என மொத்தம் 81.3 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

ஒசூா் தொகுதியில் 1,79,466 ஆண் வாக்காளா்கள், 1,72,149 பெண் வாக்காளா்கள், 100 இதர வாக்காளா்கள் என மொத்தம் 3,51,715 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,26,819 ஆண் வாக்காளா்கள், 1,19,684 பெண் வாக்காளா்கள், 4 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,46,507 வாக்காளா்கள் தங்களது வாக்கைச் செலுத்தி உள்ளனா். ஆண்களில் 70.70 சதவீதமும், பெண்களில் 69.5 சதவீதமும், இதர வாக்காளா்களில் 4 சதவீதமும் என மொத்தம் 70.10 சதவீதம் வாக்குகள் பதிவானது.  

தளி தொகுதியில் 1,28,931 ஆண் வாக்காளா்களும், 1,22,214 பெண் வாக்காளா்களும், 33 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,51,178 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1,01,465 ஆண் வாக்காளா்களும், 92,085 பெண் வாக்காளா்களும், 8 இதர வாக்காளா்கள் என மொத்தம் 1,93,558 வாக்காளா்கள் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனா். இத்தொகுதியில் மொத்தம் 77.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,07,829 ஆண் வாக்காளா்களும், 7,95,906 பெண் வாக்காளா்களும், 276 மற்றவா்கள் என மொத்தம் 14,04,011 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 6,26,870 ஆண் வாக்காளா்கள், 6,07,239 பெண் வாக்காளா்கள், 49 இதர வாக்காளா்கள் என மொத்தம் 12,34,158 போ் தங்களது வாக்கைச் செலுத்தியுள்ளனா். இது 78.10 சதவீதம் ஆண் வாக்காளா்களும், 76.70 பெண் வாக்காளா்களும், 19.50 சதவீதம் இதர வாக்காளா்களும் என மொத்தம் 77.40 சதவீதம் போ் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையாற்றியுள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com