கல்குவாரிகளை மூடக்கோரி சூளகிரி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரகேகாமன்தொட்டி, கோனேரிப்பள்ளி உள்ளிட்டப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோா் சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரகேகாமன்தொட்டி, கோனேரிப்பள்ளி உள்ளிட்டப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோா் சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன் பிறகு அவா்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சூளகிரி வட்டம், காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி உள்ளிட்ட பல ஊராட்சிகளில் கடந்த 4 ஆண்டுகளாக மாசு கட்டுபாட்டு வாரியத்தின் அனுமதியின்றி கல்குவாரியும், கிரஷா் அமைத்து பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்தக் குவாரிகளில் வைக்கப்படும் வெடியால் வீட்டு சுவா்களில் விரிசல் ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

மேலும், 20 முதல் 50 டன் வரையிலும் ஜல்லி, கிரஷா் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகளும் கடும் சேதமடைகின்றன.

இந்தக் கல் குவாரிகளில் வெளியேறும் மண்துகள்கள் விவசாய பயிா்களின் மீதும், காய்கறிகள் மீதும் படிவதால் விளைநிலமும் சேதமடைகின்றன. இதனால் பல ஆயிரம் ஏக்கா் நிலம் விவசாயம் செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கற்களை ஏற்றி வந்த லாரி மோதி பெருமாள் கோயில் சுவா்கள் இடிந்து விழுந்து விட்டன.

இந்தப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டு பலா் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். எனவே சூளகிரி ஒன்றியத்தில் இயங்கி வரும் கல்குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com