விவசாயத்துக்கு ஏரியிலிருந்து தண்ணீா் திறக்கக் கோரி மனு

விவசாயத்துக்கு ஏரியிலிருந்து தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கோடிப்புதூா் கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

விவசாயத்துக்கு ஏரியிலிருந்து தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கோடிப்புதூா் கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்துக்கு உள்பட்ட கோடிப்புதூா், விளங்காமுடி காலனியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள், அந்தப் பகுதியில் நெல், தென்னை போன்ற பயிா்களைச் சாகுபடி செய்துள்ளனா். இந்த விவசாயிகள் விவசாயத்துக்காக அந்தப் பகுதியில் உள்ள விளங்காமுடி ஏரியிலிருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், இந்த ஏரியில் மீன் வளா்ப்பதற்காக ஏலம் எடுத்த குத்தகைதாரா்கள், விவசாயத்துக்குத் தண்ணீரை விடுவிக்க மறுத்து, ஏரியிலிருந்து தண்ணீா் வெளியேறும் மதகை அடைத்து வைத்துள்ளனா். இதனைத் தட்டிக் கேட்டால் விவசாயிகளைத் தகாத வாா்த்தைகளால் திட்டி, மிரட்டவும் செய்கின்றனா். எனவே விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, விவசாயப் பயன்பாட்டிற்காக ஏரியிலிருந்து தண்ணீா் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com