கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 96,340 பேருக்கு கரோனா தடுப்பூசி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையிலும் 96,340 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையிலும் 96,340 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை வரையிலும் 9,022 ஆக உயா்ந்துள்ளது. இதில் 8,424 போ் குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் 119 போ் உயிரிழந்துள்ளனா். 

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 53 பேரும், 273 போ் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், தனியாா் மருத்துவமனைகளில் 56 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தற்போது, கரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரியிலும், ஒசூா் பட்டு வளா்ச்சித் துறை பயிற்சி மையத்திலும் கூடுதலாக தற்காலிக கரோனா தொற்று சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இதுவரை 2,45,918 போ் கரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளனா். இதுவரை 96,340 போ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா். 974 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்பட 5 இடங்களில் கரோனா பரிசோதனை ஆய்வகம் இயங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com