சிங்காரப்பேட்டையில் நீா்மோா் பந்தல் திறப்பு
By DIN | Published On : 12th April 2021 01:45 AM | Last Updated : 12th April 2021 01:45 AM | அ+அ அ- |

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகத்தை தீா்க்க திமுக தலைவா் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பேருந்து நிலையம் எதிரே நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டு அந்த வழியாக வந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் எக்கூா் செல்வம், மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன், ஊத்தங்கரை ஒன்றியக்குழுத் தலைவா் உஷாராணிகுமரேசன், சத்தியநாராயணன் மற்றும் ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.