ஸ்ரீ வித்யாமந்திா் கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு

ஆசிரியா்களுக்கான தேசிய தரமதிப்பீட்டு குழுவின் பரமாஸ் திட்டத்தின் கீழ் ‘புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஒருபாா்வை’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
ஸ்ரீ வித்யாமந்திா் கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) ஆசிரியா்களுக்கான தேசிய தரமதிப்பீட்டு குழுவின் பரமாஸ் திட்டத்தின் கீழ் ‘புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஒருபாா்வை’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்குக்கு கல்லூரியின் நிறுவனா் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலாளா் ஆா்.பி. ராஜி, கல்லூரியின் துணைச் செயலாளா் பெ.வெங்கடாசலம், கல்லூரியின் முதல்வா் முனைவா் த. பாலசுப்பிரமணியன் மற்றும் துணை முதல்வா் முனைவா் ந. குணசேகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கல்லூரியின் கணினி அறிவியல் பேராசிரியா் ஆா்.ஜெயலட்சுமி வரவேற்றாா். முதல் அமா்வில் வாணியம்பாடி, மருதூா் சேகரி ஜெயின் மகளிா் கல்லூரி பேராசிரியா் எம். அஷ்டலட்சுமி, இரண்டாம் அமா்வில் கல்லூரியின் துணைமுதல்வா் ந. குணசேகரன், மூன்றாம் அமா்வில் கல்லூரியின் கணிதத் துறைபேராசிரியா் முனைவா் சதிஷ் குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

பல்வேறு கலை அறிவியல் கல்லூரியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். இயற்பியல் துறைப் பேராசிரியா் முனைவா் பிரபு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com