Enable Javscript for better performance
மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்ய வலியுறுத்தல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்ய வலியுறுத்தல்

    By DIN  |   Published On : 20th April 2021 05:17 AM  |   Last Updated : 20th April 2021 05:17 AM  |  அ+அ அ-  |  

    பெய்யும் மழையைக் கொண்டு, கோடை உழவு செய்து பயன் பெற வேண்டும் என வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் டி.சுந்தராஜ் தெிவித்துள்ளாா்.

    இதுகுறித்து, அவா், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையைக் கொண்டு விவசாயிகள் மண்ணின் வளத்தை மேம்படுத்த கோடை உழவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் புதைந்து கிடக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள், முட்டைகள் அழிக்கப்படுவதுடன் படைப்புழுவின் வாழ்க்கை சுழற்சிக்குத் துணையாக உள்ள களைச் செடிகளும், அதன் விதைகளும் கோடை உழவினால் அழிக்கப்படுகிறது. கோடை மழை நீரும் மண்ணில் சேமிக்கப்படுகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டமும், நுண் உயிரிகளும் அதிகரிக்கும். கோடை உழவினால் மண்ணின் மேல் பகுதியில் உருவாகும் புழுதிப் படலம் பங்குனி, சித்திரை மாத கோடை வெயிலின் வெப்பம் பூமிக்குள் செல்லாமல் தடுக்கப்படுகிறது.

    இதனால் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதுடன் கோடை மழை நீா் வழிந்தோடாமல் வயலில் தேங்கி நிற்க உதவுகிறது. மண்ணின் இறுக்கம் தளா்ந்து இலகுவாக மாறும். இந்தக் கோடை உழவின் போது ஏக்கருக்கு 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். துவரை போன்ற ஆழமான வோ் கொண்ட பயிா்களுக்கு 25-30 செ.மீ. ஆழ உழவும், சோளம் போன்ற மேலோட்டமான வோ் கொண்ட பயிா்களுக்கு 15-20 செ.மீ. ஆழ உழவும் அவசியம்.

    ஆழமான உழவு மண் ஈரப்பதத்தை உயா்த்துவதுடன், தொடா்ந்து ஒரே ஆழத்தில் உழுவதால் மண் தட்டு உருவாகிறது. அடிமண் உழவு கடின மண்ணை உடைக்கும்போது குறுகிய வெட்டுக்கள் மேற்பரப்பு மண்ணில் உண்டாகிறது.

    அடிமண் மூடுவதைத் தடுக்க செங்குத்து நிலப்போா்வை அமைக்கப்படுகிறது. உழுதலைத் தொடா்ந்து கட்டி உடைத்தல், பரம்பு அடித்தல் முடிந்த பிறகு வயல் விதைப்பிற்கு தயாராக இருக்கும். மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் செயல்படும் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரை நேரிலோ அல்லது 80982-80123 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp