உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ராஜேந்திரன் எச்சரித்துள்ளாா்.

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ராஜேந்திரன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வழிகாட்டுதலின்படி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் உள்ள உரக்கடைகளில் திங்கள்கிழமை வேளாண்மை உதவி இயக்குநா் முருகன் ஆய்வு நடத்தினாா். மேலும், அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வரும் ஆய்வுப்பணிகளை வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) சுரேஷ்குமாா் கண்காணித்து வருகிறாா்.

உர வகைகளை அதன் பையில் உள்ள சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வோரின் உர விற்பனையின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் விவசாயிகளுக்கு சரியான விலையில் உரங்கள் விற்பனை செய்யப்படுகிா என்பதை கண்காணிக்கவும், தவறு செய்பவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும், 10 வட்டாரங்களுக்கும் சிறப்பு கண்காணிப்பு குழுகள் ஏற்படுத்தப்பட்டு வேளாண் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

ஆய்வின் போது, உர விற்பனை, இருப்பு, கிடங்கு உரிமம், விற்பனை ரசீது, இணையதளம் மூலம் உரம் இருப்பு விவரம், புத்தக இருப்பு, விற்பனை விலை, தகவல் பலகை, விவசாயிகளின் ஆதாா் மூலம் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. விவசாயிகள் அவா்களது ஆதாா் எண்ணுடன் உரக்கடைக்குச் சென்று மானிய விலையில் உரங்களைப் பெற்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com