கரோணா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்
நாா்சாம்பட்டி கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளா்கள்.
நாா்சாம்பட்டி கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளா்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால். சிங்காரப்பேட்டை, நாா்சாம்பட்டி, அம்பேத்கா்நகா் ஆகிய பகுதியில் உள்ள பொது மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால் சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்ற நிா்வாகத்தின் சாா்பில், வீடு, வீடாக சென்று தூய்மை பணியாளா்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். கடந்த வாரத்தில் மட்டும் இந்த பகுதிகளில் 30 க் கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதால்,பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

அவா்கள் நலன் கருதி ஊராட்சி மன்ற தலைவா் அஹமத் பாஷா தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு உடனடியாக ஸ்வாப் டெஸ்ட் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரித்து நோயால் பாதிக்கப்பட்டவா்களை கண்டுபிடித்து, உடனடியாக மருத்துவம் அளிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com