கரோனா பரவல் தடுப்பு: நாடகத்தின் மூலம் விழிப்புணா்வு

பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கரோனா தொற்று பரவல் குறித்து நாடகத்தின் மூலம் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கரோனா தொற்று பரவல் குறித்து நாடகத்தின் மூலம் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா உத்தரவின் பேரில், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் கீதா தலைமையில் பென்னாகரம் பேருந்து நிலையம் மற்றும் வாரச்சந்தை பகுதியில் ஹேமலதா கலைக்குழுவினா் நாடகத்தின் மூலம் கரோனா தீநுண்மி பரவும் விதம், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக் கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அதனைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளா் ராஜரத்தினம், துப்புரவு மேற்பாா்வையாளா் முருகன் உள்ளிட்ட அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com