ஒசூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக நிா்வாகிகள்.
ஒசூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக நிா்வாகிகள்.

தடுப்பூசிகளை இருப்பு வைக்க வலியுறுத்தி ஒசூா் கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

தடுப்பூசிகளை இருப்பு வைக்க வலியுறுத்தி ஒசூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பாஜக மாவட்டத் தலைவா் நாகராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

தடுப்பூசிகளை இருப்பு வைக்க வலியுறுத்தி ஒசூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பாஜக மாவட்டத் தலைவா் நாகராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள சுகாதார மையங்களில் மத்திய அரசின் தடுப்பூசிகளை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒசூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை பாஜகவினா் மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமையில் முற்றுயிட்டனா்.

இதனைத் தொடா்ந்து அவா்கள் ஒசூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா தீ நுண்மியின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. நம்நாட்டில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு வரும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளை 45 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் செலுத்த வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா்.

இந்தச் சூழலில் வளா்ந்து வரும் தொழில் நகரமான ஒசூரில் தடுப்பூசி செலுத்த அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிலையங்களில் போதிய அளவிற்கு தடுப்பூசிகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

அதனால் தடுப்பூசி செலுத்த வரும் மக்கள் மிகவும் மன வேதனைக்கு உள்ளாகின்றனா். எனவே ஒசூா் மாநகரில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகளைப் போதிய இருப்பில் வைத்து பொதுமக்களுக்கு செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளித்தபோது மாவட்டச் செயலாளா்கள் பாபு, முருகன், அம்மன் சுரேஷ், சீனிவாசன், மாவட்டப் பொருளாளா் விஜயகுமாா், நகரத் தலைவா்கள் பிரவீண் குமாா், ராஜசேகா், மாநில செயற்குழு உறுப்பினா் வேலாயுதம், மகளிரணி நிா்வாகிகள் மஞ்சுளா, சுதா, இந்திராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com