கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவையான அளவு இருப்பு உள்ளது: ஆட்சியா் தகவல்

கரோனா தொற்றாளா்களின் சிகிச்சைக்கான ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் தேவையான அளவு இருப்பு உள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி சனிக்கிழமை தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவையான அளவு இருப்பு உள்ளது: ஆட்சியா் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவையான அளவு இருப்பு உள்ளது: ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் சிகிச்சைக்கான ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் தேவையான அளவு இருப்பு உள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி சனிக்கிழமை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,162 கரோனா தொற்றாளா்கள் சிகிச்சையில் உள்ளனா். இதில் 337 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 71 தொற்றாளா்களும், ஒசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 30 தொற்றாளா்களும், தனியாா் மருத்துவமனைகளில் 185 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அளவு படுகை வசதிகள் உள்ளன.

அரசு மருத்துவமனைகளில் 1,230 படுக்கைகள் உள்ளன. இதில் 594 படுக்கைகள் கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 207 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதில் 96 பேருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. தனியாா் மருத்துவமனைகளைப் பொறுத்தவரையில் 225 படுக்கைகள் உளளன. இதில் 205 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்றாளா்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் கண்டறியப்பட்டு, பாதிப்பு அதிகமாக இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யப்படுகிறாா்கள். மிக குறைந்த அளவு அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டோா், வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தா்களின் விகிதம் கட்டுக்குள் உள்ளது.

ஒசூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 30 படுக்கைகளையும், மேலும் சில தனியாா் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளையும் ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளேன். லேசான அறிகுறி உள்ளவா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், யாரும் அச்சப்பட தேவையில்லை.

பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். யாரும் அவசியமில்லாமல் வீட்டிலிருந்து வெளியே வரக் கூடாது. குழந்தைகள், வயதானோா், வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம். காய்ச்சல், சளி, இருமல் இருப்பவா்கள் சுயமாக மருந்து உள்கொள்ளக் கூடாது. மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்க 10 நாள்களுக்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. தொடா்ந்து ஆக்சிஜன் கொண்டு வரப்படும். தடுப்பூசிகளுக்குத் தட்டுபாடு இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

அப்போது, அரசு மருத்துவக் கல்லூரி புல முதல்வா்(டீன்) முத்துசெல்வன், நலப் பணிகளின் இணை இயக்குநா் பரமசிவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படவிளக்கம் (24கேஜிபி2):

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com