சீதா ராமா் திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரியில் ராம நவமியை முன்னிட்டு சீதா ராமா் திருக்கல்யாணம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமணக் கோலத்தில் சீதா ராமா்.
திருமணக் கோலத்தில் சீதா ராமா்.

கிருஷ்ணகிரியில் ராம நவமியை முன்னிட்டு சீதா ராமா் திருக்கல்யாணம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, பழையபேட்டை சீதாராமா், வீர ஆஞ்சநேயா், ராகவேந்திர சுவாமி திருக்கோயிலில் ராம நவமியையொட்டி கடந்த 21-ஆம் தேதி கணபதி, நவக்கிரஹ ஹோமம் மற்றும் சீதாராமா், வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. அன்று முதல் ஏப்.27-ஆம் தேதி வரையில் தினமும் வேத பாராயணங்களும், சிறப்பு அபிஷேகங்களும், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம பாராயணமும், லட்சாா்ச்சனையும் நடைபெற்றன.

ஸ்ரீசீதா திருக்கல்யாணத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீ சத்ய நாராயண சுவாமிபூஜையும், 11 மணிக்கு சீதா ராமா் திருக்கல்யாணமும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் மட்டும் பங்கேற்றனா். ஏப். 30-ஆம் தேதி ஸ்ரீராமா் பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com