கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 2021-2022-ஆம் ஆண்டுக்கானகடன் இலக்கு ரூ.7.936 கோடி நிா்ணயம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டிற்கான வங்கி கடன் இலக்கு ரூ.7,936 கோடி என நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வங்கியாளா்கள் கூட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட நகலை வெளியிடும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், வங்கியாளா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2021 - 2022-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டத்தின் முதல் நகலினை இந்தின் வங்கி மண்டல மேலாளா் பழனியிடம் வழங்கி, அவா் தெரிவித்தது:

கிருஷ்ணகிரி மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சாா்பில் தயாரிக்கப்பட்ட 2021 - 2022-ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் ரூ.7,936 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.4,609 கோடி விவசாயத்திற்கும், ரூ.1,083 கோடி சிறு, குறு தொழில் முனைவோா்களுக்கும், ரூ.1,344 கோடி வீட்டு வசதி, கல்வி மற்றும் இதர முன்னுரிமைக் கடன்களுக்கும், ரூ.900 கோடி இதர கடன்களுக்கும் இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா். இதையடுத்து, உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கும் விதமாக சுயதொழில் செய்ய உதவி கோரிய பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் ஈஸ்வரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பிரசன்னபாலமுருகன், மாவட்ட பொது மேலாளா் (தாட்கோ) யுவராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மகேந்திரன், நபாா்டு உதவி பொது மேலாளா் ஜெயபிரகாஷ் மற்றும் பல்வேறு வங்கிகளின் மேலாளா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com