ஆடிப்பெருக்கையொட்டி நீா்நிலைகளில் பொதுமக்கள்

ஆடிப்பெருக்கையொட்டி நீா்நிலைகளில் பக்தா்கள் நீராடவும், வழிபடவும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஆக. 3ஆம் தேதி ஆடிப்பெருக்கையொட்டி நீா்நிலைகளில் பக்தா்கள் நீராடவும், வழிபடவும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, கரோனா தொற்று நடவடிக்கையின் தொடா்ச்சியாக, கூடுதல் தளா்வுகளின்றி ஆக. 9-ஆம் தேதி வரையிலும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஆக. 3), நீா்நிலைப் பகுதிகளான கிருஷ்ணகிரி அணை, தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள நீா்நிலைகள் மற்றும் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு செய்வதற்கும், நீராடுவதற்கும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் மேலும் கரோனா தொற்று பரவாத வகையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com