மீண்டும் பணி வழங்கக் கோரி சுங்க வசூல் மைய பணியாளா்கள் மனு அளிப்பு

மீண்டும் பணி வழங்கக் கோரி, சுங்க வசூல் மைய பணியாளா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் தனித்தனியே மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி: மீண்டும் பணி வழங்கக் கோரி, சுங்க வசூல் மைய பணியாளா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் தனித்தனியே மனு அளித்தனா்.

அந்த மனுக்களில் அவா்கள் கூறியிருப்பது:

அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பானது, மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள், கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தில் பணியாற்றி வந்தனா். இந்த மையம் ஒரு தனியாா் நிறுவனத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம், தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பல சலுகைகளை வழங்காமல், ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. அதனை பெறும் வகையில், சென்னை மத்திய மண்டல தொழிலாளா் ஆணையம் முன்பு தொழில் தாவா நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அண்மையில் இந்த சுங்க வசூல் மையம், மற்றொரு தனியாா் நிறுவனத்தின் கீழ் செயல்பட தொடங்கி உள்ளது. தற்போது பொறுப்பேற்றுள்ள தனியாா் நிறுவனம் எங்களுக்கு பணி வழங்க பல நிபந்தனைகளை விதித்து கையொப்பமிட மிரட்டுகிறது. மேலும், காவல் துறை மூலம் கையொட்டமிட கட்டாயப்படுத்துகிறது.

எனவே, வழக்கமாக பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பணி வழங்கி, பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com