வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடா்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத, படித்த இளைஞா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதே போல் பதிவு செய்து ஒராண்டு காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் 10-ஆம் வகுப்பு தோல்வி, தோ்ச்சி மற்றும் பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு படித்தவா்கள் தகுதியுடையவா்கள் ஆவா்.

இந்தத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடையவா்கள், ட்ற்ற்ல்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவத்தில் பக்க எண் 7-இல் உள்ள வருவாய்த் துறை சான்றில் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் ஆய்வாளரின் கையொப்பம் பெற்று, நிறைவு செய்த விண்ணப்ப படிவத்துடன் தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் தங்களுக்கென தனியாக வங்கிக் கணக்கு உள்ள புத்தகம், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் ஆக. 30-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட ஆட்சியா் அலுவலக பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்து சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com