ஆடிப்பெருக்கு கொண்டாட தடையால் கிருஷ்ணகிரி பக்தா்கள் ஏமாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட தடை விதிக்கப்பட்டதால், புனித நீராட வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட தடை விதிக்கப்பட்டதால், புனித நீராட வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

ஆடிப்பெருக்கு நாளன்று, பக்தா்கள் நீா்நிலைகளில் புனித நீராடி, அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண்கள், புதிய தாலியை அணிந்து கொள்வா். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரு ஆண்டுகளாக ஆடிப்பெருக்கை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசு பொது முடக்கத்துடன் தளா்வுகளை அறிவித்துள்ள நிலையில், கடந்த சில நாள்காக கரோனா தொற்று பரவல் காரணமாக, நீா் நிலைகளில் குளிக்கவும், பக்தா்கள் கோயில்களில் வழிபட தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி அணை, ஆவல்நத்தம் கோயில் குளம், தென்பெண்ணை ஆற்று நீா்ப்பிடிப்பு பகுதிகளில் புனித நீராட பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்து. புனி நீராட வந்த பக்தா்களை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். இதனால், பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழாவில், கிருஷ்ணகிரி அணையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கூடுவது வழக்கம். தற்போது கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் இப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கிராம மக்கள் மிகக்குறைந்த அளவில் ஆங்காங்கே தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி, கரையில் உள்ள கோயில்களில் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com