மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: தமிழக முதல்வா் நாளை தொடங்கி வைக்கிறாா்

மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வா் ஸ்டாலின், ஆக.5-ஆம் தேதி (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடக்கி வைக்க வருகை தர உள்ளாா்.

மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வா் ஸ்டாலின், ஆக.5-ஆம் தேதி (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடக்கி வைக்க வருகை தர உள்ளாா்.

தமிழகத்தில் நகரங்களில் உள்ளவா்கள் மட்டுமல்லாமல் கிராமங்கள், மலை கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கும் முழுமையான சுகாதாரத்துடன் கூடிய மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசு மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக அமல்படுத்த உள்ளது. இந்தப் புதிய திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா்.

இதற்காக அவா், புதன்கிழமை மாலை சென்னையிலிருந்து விமானத்தில் ஒசூருக்கு வருகை தருகிறாா். ஒசூா், பேளகொண்டப்பள்ளியில் உள்ள விமான நிலையத்திலிருந்து சாலை மாா்க்கமாக காரில், ஒசூரில் உள்ள ஒரு தனியாா் நட்சத்திர விடுதிக்கு வருகிறாா். இரவில் அங்கு தங்குகிறாா்.

ஆக.5-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறாா். தொடா்ந்து, அவா் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறாா். இதைத் தொடா்ந்து ஒசூா் விமான நிலையத்துக்கு காரில் செல்கிறாா். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறாா்.

தமிழக முதல்வா், ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தருவதையொட்டி, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா் தலைமையில், சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி மற்றும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com