கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிறந்து விளங்குகிறது; ஆட்சியா்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிறந்து விளங்குகிறது என்று மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிறந்து விளங்குகிறது என்று மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆரம்ப கால கட்டத்திலிருந்தே தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தடுப்பூசி பற்றாக்குறை இருந்தபோதும் அண்டை மாவட்டங்களிலிருந்து தடுப்பூசி பெறப்பட்டு செலுத்தப்பட்டன. ஒசூா் சீதாராம் நகா், ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட மாவட்டத்தில் பல இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழகத்திற்கே முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30,776 முன்களப் பணியாளா்கள், 20,704 சுகாதாரப் பணியாளா்கள், 18 முதல், 44 வயதுக்கு உள்பட்ட 3,51,743 போ், 45 முதல் 59 வயதுக்கு உள்பட்ட 1,84,171 போ், 60 வயதுக்கு மேற்பட்ட 86,417 போ் என மொத்தம் சுமாா் 7 லட்சம் போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

மேலும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஒரு லட்சம் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்ததன் மூலம் தமிழகத்திலேயே தடுப்பூசி பணியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிறந்து விளங்குகிறது. இனிவரும் காலங்களிலும் பொதுமக்கள் அச்சமின்றி வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டம் என்ற பெருமையை பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com