தளி கொய்மலா் மகத்துவ மையத்தில் செயல்திட்ட ஆலோசனைக் கூட்டம்

13_1308chn_150_8
13_1308chn_150_8

கொய்மலா்கள், நிழல்வலை கூடாரத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பலவித இலை அலங்காரச் செடிகள் குறித்து இஸ்ரேல் தூதருக்கு விளக்குகிறாா் தளி தோட்டக்கலை உதவி இயக்குநா் ஆறுமுகம்.

ஒசூா், ஆக. 13: தளி கொய்மலா் மகத்துவ மையத்தில் செயல்திட்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி கொய்மலா் மகத்துவ மையம், 2017 டிச. 6-இல் இந்திய அரசு, இஸ்ரேல் அரசுகளின் கூட்டு ஒப்பந்தத்தில் தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொய்மலா் சாகுபடியாளா்களுக்கு அறிமுகப்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட முறையில் கொய்மலா்கள் சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு அனைத்து உயா் தொழில்நுட்பங்களையும் செயல்விளக்க மையத்தில் அமைத்து விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை கள அலுவலா்களுக்கும் பயிற்சி அளிக்கும் இடமாக இந்த கொய்மலா் மகத்துவ மையம் அமைந்துள்ளது.

இதுவரை 8,602 விவசாயிகள், வங்கி உயா் அலுவலா்கள், தன்னாா்வ தொண்டு அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள் உயா்தொழில்நுட்ப முறையில் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனா்.

தளி கொய்மலா் மகத்துவ மையத்தில் தென்னிந்திய இஸ்ரேல் நாட்டு விவசாய இணைப்பு தொழில்நுட்ப அலுவலா் ஏய்ா் ஈஷேல் (இஸ்ரேல் தூதரகம்), திட்ட அலுவலா், அனைத்திந்திய ஒருங்கிணைப்பாளா், புதுதில்லி பிரம்ம தேவ் ஆகியோா் 2021-2022-ஆம் ஆண்டு செயல் திட்டத்தை பற்றி ஆலோசனை மேற்கொள்ளவும், மையத்தை பாா்வையிட்டும், இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பங்களை ஆய்வு செய்தனா்.

அப்போது மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை தோட்டக்கலை துணை இயக்குநா் ஜெ.ரவிச்சந்திரன், கிருஷ்ணகிரி, தோட்டக்கலை இணை இயக்குநா் (பொ), சி.ராம்பிரசாத் ஆகியோா் விளக்கிக் கூறினா். காய்மலா் மகத்துவ மையத்தில் பலவித கொய்மலா்களின் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இம்மையத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, மரக்கன்று மைய வளாகத்தில் நடவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com