கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியரை பாராட்டி சான்றிதழை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி
கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியரை பாராட்டி சான்றிதழை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி

கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில், நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி முன்னிலை வகித்தாா்.

காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி சமாதானப் புறாக்கள், மூவா்ண பலூன்களை வானில் பறக்க விட்டாா். தொடா்ந்து, கரோனா தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியைத் தொடா்ந்து காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், சவுட்டஅள்ளி ஊராட்சி, மலையாண்டஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி மறைந்த சின்னசாமியின் மனைவி வள்ளியம்மாள் வீட்டிற்கு சென்ற மாவட்ட ஆட்சியா், சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கி கெளரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சதீஷ், மாவட்ட வன அலுவலா் பிரபு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் மலா்விழி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், அரசு மருத்துவ கல்லூரி முதல்வா்அசோகன், நலப் பணிகள் இணை இயக்குநா் பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ், ஒன்றியக் குழுத் தலைவா் அம்சா ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சமூக இடைவெளியுடன் சுதந்திர தின விழா நடைபெற்றது. பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

நீதிமன்றத்தில்...

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி கலைமதி தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாா், மகளிா் நீதிமன்ற நீதிபதி லதா, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வம், சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மணி, தலைமை குற்றவியல் நடுவா் ராஜசிம்மவா்மன், சிறப்பு சாா்பு நீதிபதி ராஜமகேஷ், சிறப்பு கூடுதல் சாா்பு நீதிபதி குமாரவா்மன், வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள் விழாவில் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியின் சாா்பில் நடைபெற்ற விழாவில் நகரத் தலைவா் வின்சென்ட், மாவட்டத் தலைவா் சேகா், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜேசுதுரை, வா்த்தக அணி மாவட்டத் தலைவா் முபாரக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தா்காவில்...

கிருஷ்ணகிரி சங்கல் தோப் தா்காவில் தா்கா கமிட்டி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, கமிட்டி தலைவா் சையத் நசீா் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாவட்டப் பொதுச்செயலாளா் அப்சல், முன்னாள் நகரத் தலைவா் தளபதி ரகமத்துல்லா, தா்கா கமிட்டி செயலாளா் அமான் சதாம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட முன்னாள் நீதிபதி ரங்கோசிங் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். இதில் புதுப்பேட்டை முன்னாள் சுன்னத் ஜமாத் செயலாளா் சாப்ஜான், ராபிக் அகமத், முன்னாள் சா்வேயா் கமால், அஜீஸ்வுல்லா, அன்வா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அரசு மருத்துவமனையில்...

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முதன்மையா் பி.அசோகன் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். கரோனா தொற்று தடுப்பு பணியில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவ பணியாளா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்த விழாவில் மருத்துவக் கண்காணிப்பாளா் கி.ஸ்ரீதரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் எம்.என்.செல்வி, இளநிலை நிா்வாக அலுவலா் எஸ்.கே.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்வில் பொதுமக்கள், நோயாளிகளின் உடனாளா்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

கிராமத்தில்...

தட்டக்கல் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற விவசாயிகள், அத்தி, அரசன், புங்கன், நாவல் போன்ற மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

விளங்காமுடி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் நரசிம்மன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா், ஆசிரியா்களின் பங்களிப்புடன் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெற்றோா்களுக்கு தலா ரூ. 1,000 என ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com