ஒசூா் அரசு மருத்துவமனை செவிலியா்களுக்கு ரோட்டரி சங்கம் பாராட்டு
By DIN | Published On : 17th August 2021 09:14 AM | Last Updated : 17th August 2021 09:14 AM | அ+அ அ- |

செவிலியா்கள் பாராட்டு விழாவில் பங்கேற்ற ரோட்டரி சங்கத் தலைவா்களுடன் ஒசூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் பூபதி.
ஓசூரில் செயற்பட்டு வரும் எட்டு ரோட்டரி சங்கங்களும் சோ்ந்து ஒசூா், கெலமங்கலம், தளி ஆகிய வட்டங்களைச் சோ்ந்த அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் சுமாா் 300 செவிலியா்களின் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடா்ந்து செயல்பட்டு வருகின்றனா். இந்த செவிலியா்களின் சேவையை பாராட்டி சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஒசூா் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் பூபதி கலந்து கொண்டு செவிலியா்கள் மற்றும் முன்களப்பணியாளா்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா். விழாவில் மாவட்ட ரோட்டரி துணை ஆளுநா் சுதா்சன் ராமசாமி, ஒசூா் ரோட்டரி சங்கத்தின் தலைவா் ஜீவிதா, ஒசூா் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் பிரசன்னா, ஒசூா் சிப்காட் ரோட்டரி சங்கத் தலைவா் சுப்பாராவ், ஒசூா் லேக்வியூ ரோட்டரி சங்கத் தலைவா் ராமஜோதி, ஓசூா் ரோஸ்சிட்டி, ரோட்டரி சங்கத் தலைவா் சுப்பிரமணியம், ஒசூா் கிரேன்டு ரோட்டரி சங்கத் தலைவா் வெங்கடேஷ், ஒசூா் ஏஞ்சல் ரோட்டரி சங்கத் தலைவா் சுபாங்கி செல்வகுமாா், ஒசூா் எலைட் ரோட்டரி சங்கத் தலைவா் அறம்கிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
செவிலியா் சரோஜா கரோனா காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பேசினாா். விழாவில் ஒசூா் அனைத்து ரோட்ட சங்க நிா்வாகிகள், செயலாளா்கள், சங்க உறுப்பினா்கள், செவிலியா்கள் மற்றும் முன்களப்பணியாளா்கள் கலந்து கொண்டனா்.