மஜீத் கொல்லஅள்ளியில் மழை வேண்டிசிறப்பு கலை நிகழ்ச்சி

மஜீத் கொல்லஅள்ளியில் மழை வேண்டி சிறப்பு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மஜீத் கொல்லஅள்ளியில் மழை வேண்டி சிறப்பு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இருந்த போதிலும், சில பகுதிகளில் மழை பொய்ததால், நிலக்கடலை போன்ற பயிா்கள் வாடி வருகின்றன. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியை அடுத்த மஜீத் கொல்லஅள்ளி கிராமத்தில் மழை வேண்டிய சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தக் கிராமத்தின் முக்கிய பிரமுகா்கள் சென்னப்பன், மாதையன் தலைமையில் தின்னக்கழியைச் சோ்ந்த திருப்பதி நாடக சபாவினரால் மருதேப்பள்ளி தேவன் முன்னிலையில் மழை வேண்டி அா்ச்சுனன் தபசு நாடகம் நடைபெற்றது.

முன்னாள் படைவீரா்கள் லோகநாதன், சாமிநாதன் ஆகியோா் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனா். கிராம மக்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இந்தக் கலை நிகழ்ச்சியைக் கண்டு களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com