தமிழகத்திற்கு செப். மாதம் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி ஒதுக்கீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்திற்கு வரும் செப்டம்பர் மாதம் ஒரு கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 170 தடுப்பூசி மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்
தமிழகத்திற்கு செப். மாதம் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி ஒதுக்கீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்திற்கு வரும் செப்டம்பர் மாதம் ஒரு கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 170 தடுப்பூசி மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் ரூ 1 கோடியே 20 லட்சம் சிஎஸ்ஆர் நிதியிலிருந்து நிறுவப்பட்ட ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைக்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திங்கட்கிழமை ஒசூர் வந்தார்.  அவர் மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தில் பயன் பெற்று வரும் நோயாளிகளை சூளகிரி ஒன்றியம் பார்த்த கோட்டா கிராமத்திற்குச் சென்று நேரில் மருந்துகளை அளித்து, அப்பொழுது அவர்களிடம் முதல்வர் உங்களுக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான  மருந்துகளை வழங்கும் படி உத்தரவிட்டுள்ளார், வாங்கிக்கொள்ளுங்கள் என தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து ஒசூர் அரசு மருத்துவமனையில் அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை துவக்கி வைத்தார்.  அதன்பிறகு செய்தியாளரிடம் கூறியது, மத்திய அரசு செப்டம்பர் மாதம் 1,04,198,170 தடுப்பூசிகளை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பாக கோவி ஷீல்ட் 90,24,070மற்றும் கோவாக் சின் 14,74,100ஒதுக்கீடு செய்துள்ளது. கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டுள்ளதால் ஓசூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிருஷ்ணகிரியை 2 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் எனவும் ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் பரிசீலனை செய்து முடிவு செய்வார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளரிடம் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com