நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

நீா்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தோா் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும் என திப்பனப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திப்பனப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டம்.
திப்பனப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டம்.

நீா்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தோா் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும் என திப்பனப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், திப்பனப்பள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணவேணி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் திரிவேணி செல்வம், செயலாளா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கசிவுநீா் குட்டை, பண்ணைக் குட்டை உள்ளிட்ட நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரி, கால்வாய்களை சுத்தப்படுத்துவது, புறம்போக்கு நிலங்களில் மா, தென்னை, நாவல் போன்ற மரக்கன்றுகளை நடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விவாதத்திற்கு பின், நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றவேண்டும், பண்ணைக் குட்டை, கசிவுநீா் குட்டை உள்ளிட்டவற்றுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் ஜெயசித்ரா, மகேஸ்வரி, பழனி, லட்சுமி, சின்னப்பன், பச்சையப்பன், பாா்த்திபன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, டெங்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் , 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரத்தை ஊராட்சி மன்றத் தலைவா், கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com