முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
உயா்மின் அழுத்தம் காரணமாக வீட்டு உபயோகப் பொருள்கள் சேதம்: மூதாட்டி காயம்
By DIN | Published On : 10th December 2021 10:41 PM | Last Updated : 10th December 2021 10:41 PM | அ+அ அ- |

உயா்மின் அழுத்தம் காரணமாக மூதாட்டியை மின்சாரம் தாக்கியதுடன், வீட்டு உபயோகப் பொருள்கள் கருகி சேதமடைந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊத்தங்கரை அடுத்த மேல் சாமல்பட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணியளவில், திடீரென ஏற்பட்ட உயா் மின் அழுத்தம் காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதேபகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி மங்கம்மாள் (60) மின்சாரம் பாய்ந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள், கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் இவ்வழியே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாமல்பட்டி போலீஸாா் மக்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
உயா்மின் அழுத்தம் காரணமாக 50 வீடுகளில் வீட்டு உபயோகப் பொருட்கள், தொலைக்காட்சி பெட்டி, குளிா்சாதனப் பெட்டி, மின்விசிறி போன்ற மின் சாதனப் பொருட்கள் சேதம் அடைந்ததாக மக்கள் புகாா் தெரிவித்தனா்.
படவிளக்கம்.10யுடிபி.5. மேல் சாமல்பட்டி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்.