ஊத்தங்கரை அதியமான் கல்லூரி மாணவிகள் சாதனை

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2017 - 2020 ஆம் கல்வியாண்டிலும், 2018 - 2021 ஆம் கல்வியாண்டிலும் பயின்ற மாணவிகள் பல்கலைக்கழக அளவில் பல்வேறு இடங்களை வென்று சாதனை புரிந்துள்ளன

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2017 - 2020 ஆம் கல்வியாண்டிலும், 2018 - 2021 ஆம் கல்வியாண்டிலும் பயின்ற மாணவிகள் பல்கலைக்கழக அளவில் பல்வேறு இடங்களை வென்று சாதனை புரிந்துள்ளனா்.

முதுநிலை விலங்கியல் துறையில் பயின்ற செ.ராஜலட்சுமி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளாா். ஆங்கிலத் துறை செ.டெனிஷா 9-ஆம் இடத்தையும், ஜெ. அப்ரின் 10-ஆம் இடத்தையும், தமிழ்த் துறை மாணவி வெ.கோகுல லட்சுமி 10-ஆம் இடத்தையும், இயற்பியல் துறை மாணவிகள் தே.ஷோபியா 7-ஆம் இடத்தையும், சு.சுவலட்சுமி 9-ஆம் இடத்தையும், சி.சுமித்ரா 8-ஆம் இடத்தையும், மா.சந்தியா 9-ஆம் இடத்தையும், ச.விஷ்ணுபிரியா 10-ஆம் இடத்தையும், மு.அா்ச்சனா 9-ஆம் இடத்தையும், கணிதத் துறை மாணவிகள் ச.மோனிகா 3-ஆம் இடத்தையும், கே.கோமதி 8-ஆம் இடத்தையும் வென்றனா்.

முதுகலையில் தாவரவியல் துறை மாணவி க.லாவண்யா 3-ஆம் இடத்தையும், கோ.வினோதினி 2-ஆம் இடத்தையும், வணிகவியல் முதுகலை மாணவிகள் ம.கௌசல்யா 7-ஆம் இடத்தையும், கோ. கலைமணி 5-ஆம் இடத்தையும், அ.தேவதா்ஷினி 8-ஆம் இடத்தையும், ம.சுகுணா 9-ஆம் இடத்தையும், கணினி அறிவியல் துறை மாணவிகள் பெ.இலக்கியா 7-ஆம் இடத்தையும், ர.சா்மிளா 6-ஆம் இடத்தையும், ரா.தமிழ்ச்செல்வி 5-ஆம் இடத்தையும், கணினி பயன்பாட்டியல் மாணவி வீ.புவனேஷ்வரி 6-ஆம் இடத்தையும் , வேதியியல் துறை மாணவி கே.ரேவதி 2-ஆம் இடத்தையும் வென்றனா்.

கல்லூரியின் பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவிகளுக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி. திருமால் முருகன், அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலா் ஜெ.மே.ஷோபா, கல்லூரியின் முதல்வா் முனைவா் ப.உமாமகேஷ்வரி அனைத்துத் துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com