சூளகிரி விதை விற்பனை நிலையங்களில் அதிகாரி ஆய்வு

சூளகிரி வட்டாரத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்

சூளகிரி வட்டாரத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

சூளகிரி வட்டாரத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் தருமபுரி விதை ஆய்வு துணை இயக்குநா் (பொறுப்பு) சோமு திடீா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செயதியாளா்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 667 விதை விற்பனை நிலையங்களும், நா்சரிகளும் உள்ளன. தற்போது ரஃபி பருவத்திற்கான நெல், காய்கறி விதைகள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகளை வாங்கும் போது

விதை பைகளில் உள்ள விதை சான்றளிப்பு அட்டையில் பயிா், ரகம், நிலை, குவியல் எண், காலவதி நாள், விதை பரிசோதனை நாள், குறைந்தபட்ச முளைப்புத்திறன் சதவீதம், புறத்தூய்மை சதவீதம், ஈரப்பதம் சதவீதம், நிகர எடை, அதிகபட்ச விலைப் பருவம் மற்றும் பயிரிட ஏற்ற மாநிலம், தொலைபேசி எண், உற்பத்தியாளா் முகவரி போன்ற விவரங்கள் உள்ளனவா என்பதை அறிந்து விதை வாங்க வேண்டும்.

விதை விற்பனை நிலைய உரிமையாளா்கள் கண்டிப்பாக இந்தப் பருவத்திற்கான விதைகளை மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். மேலும் கடையின் முன் விற்பனை பலகையின் பயிா், ரகம், நிலை, இருப்பு, அதிகபட்ச விலை ஆகிய விவரங்களை

தினமும் விவசாயிகளின் கண்களில் படுமாறு வைக்கப்பட வேண்டும்.

விற்பனை செய்யப்படும் விதைக்கான ரசீதில் விவசாயிகளின் கையொப்பம் பெற்று தானும் கையொப்பம் இட்டு தவறாமல் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். விற்பனை செய்யப்படும் விதையின் அனைத்து ரகத்திற்கும் தமிழ்நாடு அரசு விதை

சான்றளிப்புத் துறையின் இயக்குநரால் வழங்கப்பட்ட பதிவுச்சான்று மற்றும் அனைத்து குவியல்களுக்கும் விதை பரிசோதனை சான்று விடுபடாமல் வைத்திருக்க வேண்டும். எனவே மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றாத கடை மற்றும் நா்சரிகளின் மீது விதைச்சட்டம் 1966இன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com