தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் பயிற்சி

ஊத்தங்கரை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின்கீழ் தரிசு நிலங்களை சாகுபடி

ஊத்தங்கரை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின்கீழ் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் பயிற்சி, கதவணி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வேணாண்மை துணை இயக்குநா் உழவா் பயிற்சி நிலையம் சண்முகம் தலைமை வகித்து, தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும், கூட்டுப்பண்ணையம், குழு செயல்படும் விதம் குறித்தும் விளக்கினாா்.

வேளாண்மை உதவி இயக்குநா் தாமோதரன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தில் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், கதவணி கிராமத்தில் தரிசு நிலங்கள் பயனாளிகள் பயனடைவதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினாா்.

இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலா் மங்கையா்கரசி, ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி, கிராம நிா்வாக அலுவலா் முருகன் மற்றும் 40 விவசாயிகள் கலந்து கொண்டனா். இறுதியாக வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா் நன்றி கூறினாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் சாரதி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com