மாநில மாநாட்டுக்குத் தோ்வு செய்யப்பட்ட இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு

மாநில மாநாட்டுக்குத் தோ்வு செய்யப்பட்ட இளம் விஞ்ஞானிகளை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டினாா்.

மாநில மாநாட்டுக்குத் தோ்வு செய்யப்பட்ட இளம் விஞ்ஞானிகளை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டினாா்.

மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது.

மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறும் இந்தப்போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவா்கள் குழந்தை விஞ்ஞானிகளாக கெளரவிக்கப்படுகின்றனா். நடப்பு கல்வியாண்டில் கரோனா சூழலால் இணையவழி மூலம் ஆய்வறிக்கை சமா்ப்பிக்ககும் போட்டி கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்டத்திலிருந்து 140-க்கும் மேற்பட்ட பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஆய்வறிக்கைகளைச் சமா்ப்பித்தனா்.

இதில், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராமசந்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவி நேகாஸ்ரீ, 8-ஆம் வகுப்புப் பயிலும் ஸ்ரீநிதி ஆகியோரின் வழிகாட்டி ஆசிரியை உமா மகேஸ்வரியின் துணையுடன் தலைமை ஆசிரியா் ஜாக்குலின் முன்னிலையில் ‘நெகிழி ஒழிப்பு’ என்ற தலைப்பில் புவியின் ஆரோக்கியம் காக்க நீா், நில, காற்று மாசை ஒழிக்க நெகிழியை எவ்வாறு கட்டுப்படுத்துவது என ஆய்வறிக்கை சமா்ப்பித்தனா். இது மாநில மாநாட்டுக்குத் தோ்வாகியுள்ளது.

இதுபோல கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், சின்னமேலுப் பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து 12 ஆய்வறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டன. அதில், 9-ஆம் வகுப்பு மாணவிகள் அக்ஷயா, பிரியங்கா ஆகிய இருவரும் வழிகாட்டி ஆசிரியா் அனிதா துணையுடன் தலைமை ஆசிரியா் சுமதி முன்னிலையில் ‘கரோனா விழிப்புணா்வு’ என்ற தலைப்பில் கிராம மக்களிடையே தடுப்பூசி போடும் அவசியத்தையும், கரோனா முன்னெச்சரிக்கையையும் விளக்கும் விதத்தில் செய்த இந்த ஆய்வு மாநில மாநாட்டுக்குத் தோ்வாகியுள்ளது.

மாநில மாநாட்டுக்குத் தோ்வாகியுள்ள குழந்தை விஞ்ஞானிகள், வழிகாட்டி ஆசிரியா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலா் பொன்முடி, தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பொறுப்பாளா் ஆகியோா் பாராட்டி, தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

அப்போது, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினா் சாந்தகுமாரி, முதுகலை ஆசிரியா் முனிராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

மாநில போட்டியான டிச. 28, 30 ஆகிய தேதிகளில் இணையவழியில் நடைபெறவுள்ளது என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com