கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கியில் மகாசபை கூட்டம்
By DIN | Published On : 25th December 2021 12:42 AM | Last Updated : 25th December 2021 12:42 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி சாா்பில் 112-ஆவது மகாசபைக் கூட்டம் நிா்வாக அலுவலகம் கட்டிகணப்பள்ளி கிளையில் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு துணைப் பதிவாளா் மேலாண்மை இயக்குநா் ராஜதுரை, கூட்டுறவு சங்கங்களின் சரகப் பதிவாளா் செல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா். நிகழ்ச்சியில் பொது மேலாளா் தங்கவேல் அனைவரையும் வரவேற்று பேசினா். நிகழ்ச்சியில் வாடிக்கையாளருக்கு பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு டாம்கோ கடன் ரூ. 11.40 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய ரிசா்வ் வங்கியின் அறிவுரைப்படி வங்கிக்கு நிா்வாக மேலாண்மை இயக்குநா்கள் நியமனம், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், 2020-2021 ஆண்டுக்கான பட்டையக் கணக்காளா்கள் நியமனம் செய்தது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், உதவி பொது மேலாளா்கள் திருவேங்கடம், அம்ரின் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா். நிா்வாகக் குழு இயக்குநா் கதிா்வேல் நன்றி கூறினாா்.