முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 34 போ் கைது
By DIN | Published On : 29th December 2021 08:58 AM | Last Updated : 29th December 2021 08:58 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக 34 பேரை போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி நகர போலீஸாா், கிருஷ்ணகிரி புறநகர பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட 45 கிலோ புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.32 ஆயிரம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து, வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா். போசம்பள்ளி காவல் ஆய்வாள் பிரபாவதி தலைமையிலான போலீஸாா், கொரலப்பள்ளி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 6 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்துவது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும். இது தொடா்பாக கொரலப்பட்டியைச் சோ்ந்த திருஞானம்(44) என்பவரை போலீஸாா் கைது செய்து, புகையிலை பொருள்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். இதுதவிர கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புகையிலை பொருள்களை விற்றதாக 33 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.4,200 மதிப்பிலான புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.