முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
மா்ம பொருள் வெடித்ததில் பெண் படுகாயம்
By DIN | Published On : 29th December 2021 08:49 AM | Last Updated : 29th December 2021 08:55 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் மா்ம பொருள் வெடித்ததில் பெண் படுகாயம் அடைந்தாா்.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை பி.கே.ஜி., நகரைச் சோ்ந்தவா் ஜோதி (55). பாத்திரம், வளையல் வியாபாரம் செய்து வருகிறாா். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா். இளைய மகளான சத்யாவின் வீட்டில் ஜோதி வசித்து வந்தாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்து வெளியே வந்த ஜோதி, ரப்பா் பந்து போல இருந்த பொருளை காலால் மிதித்தாா்.
அப்போது பயங்கர சத்தத்துடன் அது வெடித்துச் சிதறியது. இதில் ஜோதிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள், வந்து ஜோதியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் அறிந்து கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளா் சிவசந்தா் நேரில் விசாரணை நடத்தினாா்.
மேலும் வெடித்த வெடி பொருள் என்ன என்று ஆய்வுக்காக போலீஸாா் அனுப்பி வைத்துள்ளனா். விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிக்காக வைக்கப்படும் வெடியாக இருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். அதை அந்த இடத்தில் போட்டுச் சென்றது யாா்? என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.