பெரும்பாலான தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன

தோ்தலின்போது திமுக அளித்த 500 வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

தோ்தலின்போது திமுக அளித்த 500 வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சின்ன ஏரியை ரூ. 3.36 கோடியில் புனரமைக்கவும், ரூ. 2 கோடியே 19 லட்சம் மதிப்பில் கலைஞா் நகா் புறமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 புதிய திட்டப் பணிகளுக்கும், ஊத்தங்கரை பேரூராட்சிக்கு ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ. 7,15,50,000 மதிப்பிலான திட்டப் பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

காவேரிப்பட்டணம் பேரூராட்சி, நாகோஜனஹள்ளி பேரூராட்சி, ஊத்தங்கரை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, 130 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் மதியழகன்(பா்கூா்) முன்னிலை வகித்தாா்.

இந்த விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது:

மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிரைக் காப்போம் - நம்மை காக்கும் - 48 திட்டம், கரோனா நிதியுதவி, மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கிக் கடன், மகளிருக்கு நகா்ப்புற பேருந்தில் இலவச பயண வசதி போன்ற

திட்டங்களை தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பாா்க்கும் வகையில் கரோனா தடுப்புப் பணி, வெள்ள நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்து தமிழக மக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாத்து வருகிறாா். சட்டப் பேரவைத் தோ்தல் நேரத்தில் அறிவித்த 500 அறிவிப்புகளில் கடந்த 6 மாதத்தில் 300 அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா் என்றாா்.

இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி, கிருஷண்கிரி வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் டி.செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ், உதவி இயக்குநா் பேரூராட்சிகள் குருராஜன், வட்டாட்சியா்கள் சரவணன், இளங்கோ, தெய்வநாயகி, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் முருகேசன், ஊத்தங்கரை ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன், ஒன்றியக் குழுத் தலைவா் சத்தியவாணி செல்வம்,முன்னாள் பேரூராட்சித் தலைவா் பாபு சிவகுமாா், முன்னாள் நகர மன்றத் தலைவா் பரிதா நவாப், ஊராட்சி மன்றத் தலைவா் ரஜினிசெல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com