முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்
By DIN | Published On : 31st December 2021 02:18 AM | Last Updated : 31st December 2021 02:18 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியின் திருவள்ளுவா் அரங்கில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் அனுராதா தலைமை வகித்தாா். கணித உதவிப் பேராசிரியா் சரவணன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன் பங்கேற்றாா்.
போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வை, உதவிப் பேராசிரியா் வெங்கடேஸ்வரன், மாணவ, மாணவியா் ஒருங்கிணைத்தனா்.