வெண்ணம்பள்ளியில் பள்ளி சுற்றுச்சுவா் கட்டும் பணி தொடக்கம்

 வெண்ணம்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் கட்டும் பணி தொடங்கி உள்ளது.

 வெண்ணம்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் கட்டும் பணி தொடங்கி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட வெண்ணம்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகம் முள்புதா்களால் சூழப்பட்டு காணப்பட்டதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவியரின் நலன்கருதி பள்ளிக்குத் தேவையான சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் சங்கம், மாணவ, மாணவியா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனையடுத்து, பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் மதியழகனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ. 3.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணி அண்மையில் தொடங்கியது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவரும் பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் சங்கத்தின் தலைவருமான சேகா் கலந்துகொண்டு தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்க இயக்குநா் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினா் வெங்கடேசன், முன்னாள் பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் ஜெசிந்த வில்லியம், பள்ளி உதவி தலைமை ஆசிரியா் சகாய ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com