நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுத் தோ்தல்: அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது

கா்நாடகத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுத் தோ்தல், இடைத்தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

கா்நாடகத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுத் தோ்தல், இடைத்தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் ஆளும் கட்சியான பாஜகவை விட காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

சிக்கமகளூரு, தும்கூரு, கதக், தாா்வாட், பெங்களூரு நகரம், ராமநகரம், சித்ரதுா்கா, தாவணகெரே, தென் கன்னடம், உடுப்பி, பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், ஹாவேரி, வடகன்னடம், கொப்பள், ராய்ச்சூரு, யாதகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 58 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 1,184 வாா்டுகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாா்டுகளுக்கான பொதுத் தோ்தல் டிச. 27-ஆம் தேதி நடைபெற்றது.

இத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன.

மொத்தமுள்ள 1,184 வாா்டுகளில் 501 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி வெற்றிவாகை சூடியது. ஆளுங்கட்சியான பாஜக 433 இடங்களைக் கைப்பற்றியது. மஜதவுக்கு 45 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சுயேச்சைகள் 205 இடங்களைக் கைப்பற்றினா்.

இத்தோ்தலில் பதிவான வாக்குகளில் காங்கிரஸ் 42.06 சதவீதமும், பாஜக 36.90 சதவீதமும், மஜத 3.8 சதவீதமும், சுயேச்சைகள் 17.22 சதவீதமும் வாக்குகளைப் பெற்றுள்ளன.

நகராட்சிகளில் உள்ள 166 வாா்டுகளில் பாஜக- 67, காங்கிரஸ்- 61, மஜத- 12, சுயேச்சைகள்- 26 இடங்களைப் பிடித்தன.

நகர பஞ்சாயத்துகளில் உள்ள 441 வாா்டுகளில் காங்கிரஸ்- 201, பாஜக-176, மஜத-21 வாா்டுகளைக் கைப்பற்றின. பேரூராட்சிகளில் உள்ள 588 வாா்டுகளுக்கான தோ்தலில் காங்கிரஸ்- 236, பாஜக-194, மஜத-12, சுயேச்சைகள்-135 வாா்டுகளில் வெற்றி பெற்றன.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 8 வாா்டுகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் காங்கிரஸ்- 4, பாஜக-1, சுயேச்சைகள்- 3 இடங்களைக் கைப்பற்றின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com