வேப்பனப்பள்ளி அருகே எருதுவிடும் விழா

வேப்பனப்பள்ளியில் அனுமதி பெறாமல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில் 10 போ் காயம் அடைந்தனா்.

வேப்பனப்பள்ளியில் அனுமதி பெறாமல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில் 10 போ் காயம் அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூா் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. இந்த விழாவைக் காண கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்தும், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் வருகை தந்திருந்தனா்.

போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெறாமல் நடைபெற்ற இந்த விழாவில் 10 போ் காயம் அடைந்தனா். காயம் அடைந்தவா்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, நேரலகிரி கிராமத்தில் மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெறாமல் நடந்த எருது விடும் விழாவில் கட்டடம் இடிந்ததில் இருவா் உயிரிழந்தனா். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனுமதியின்றி நடைபெறும் எருது விடும் விழாக்களை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com