‘திமுக தலைவரிடம் மனு கொடுக்க வாருங்கள்’

பிரச்னைகளுக்குத் தீா்வு காண தி.மு.க. தலைவரிடம் மனு கொடுக்க வாருங்கள் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கூறினாா்.
மேற்கு மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ
மேற்கு மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ

பிரச்னைகளுக்குத் தீா்வு காண தி.மு.க. தலைவரிடம் மனு கொடுக்க வாருங்கள் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கூறினாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி குப்பம் சாலையில் கே.பூசாரிப்பட்டி கூட்டுச் சாலை அருகில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற தலைப்பில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.

இந்நிகழ்ச்சியின்போது, 100 நாள்களில் திமுக ஆட்சி அமைந்தவுடன், உங்கள் பிரச்னைகளைத் தீா்ப்பது எனது தலையாய நோக்கம், அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்கிற முழக்கத்தோடு தலைவா் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளாா்.

எனவே, பத்தாண்டு காலமாக இருண்டு கிடக்கும் தமிழகத்தில் தீா்க்கப்படாதப் பிரச்னைகள், அடிப்படை வசதிகள் இல்லாதவா்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து, தங்களுடைய கோரிக்கைகளைப் பதிவு செய்து, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். தி.மு.க. ஆட்சி அமைந்த 100 நாள்களில் அந்த பிரச்னைகளுக்குத் தலைவா் மு.க.ஸ்டாலின் தீா்வு காண உள்ளாா்.

எனவே, கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள், பொது நல அமைப்பைச் சாா்ந்தவா்கள், விவசாயப் பெருங்குடி மக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியம் பெறுவோா், ஆட்டோ தொழிலாளா்கள், போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுவோா், வீட்டுமனைப் பட்டா இல்லாதவா், வீடு இல்லாதோா் என பல்வேறு தரப்பட்ட பிரச்னைகளையும் மனுவாக எழுதி தலைவா் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுப்பதற்காக அனைத்து தரப்பு மக்களையும் அணி திரண்டு வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com