தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெற்ற 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்களில் பொதுமக்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெற்ற 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்களில் பொதுமக்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து ஊற்றி முகாமைத் தொடக்கி வைத்தாா்.

அப்போது, தருமபுரி மாவட்ட ஆட்சியா் எஸ்.பி.காா்த்திகா, மாவட்ட வருவாய் அலுவலா் ராமமூா்த்தி, ஆ.கோவிந்தசாமி எம்எல்ஏ, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் ஜெமினி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தருமபுரி மாவட்டத்தில், போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக கிராமப் பகுதிகளில் 964 முகாம்களும், நகரப் பகுதிகளில் 20 என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தருமபுரி மாவட்டத்தில் 1,48,443 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், 1,44,435 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டன.

இது 97.3 சதவீதம் ஆகும். தருமபுரி மாவட்டத்தில் சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் பல்வேறு அரசுத் துறைகளின் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 4,083 போ் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com